Blogger Course | SEO Setting for Blogger Websites
கடந்த பதிப்பின் வாயிலாக நாம் எவ்வாறு ஒரு இணையத்தளத்தினை Bloggerயில் வடிவமைப்பது என்பது தொடர்பாக தெளிவான விளக்கத்தினை பார்த்தோம். இவ்வாறு வடிவமைக்கப்பட்ட இணையத்தளத்திற்கு நாம் சில மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது. அது எவ்வாறு செய்வது ? என்ன என்ன மாறுதல்கள் செய்ய வேண்டும் ? என்ற பூரண விளக்கத்தினை இந்த பதிப்பின்வாயிலாக அறிந்து கொள்ளலாம். SEO Setting என்றால் என்ன ? SEO என்பதன் முழுமையான அர்த்தம் "Search Engine Optimitation" என்பதாகும். அதாவது Google, Yahoo, Bingo, Yandex போன்ற பிரபல இணையத்தளங்கள் உங்களுடைய இணையத்தளத்தினை இனம் கண்டு தங்களுடைய தேடுதல் பொறியில் உள்ளடக்க வேண்டும் இதனை Indexing என்று குறிப்பிடுவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் Search Engine களை பயன்படுத்தி ஒரு நபர் தேடும் சந்தர்ப்பத்தில் உங்களுடைய இணையத்தளம் அந்த நபருக்கு காண்பிற்கப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய இணையத்தளத்திற்கு அதிகளவான நபர்கள் வருவார்கள். இதன் மூலம் உங்களுடைய வருமானம் அதிகரித்து இணையத்தளத்தின் ஆரோக்கியமும் மேம்படும். SEO என்பது ஒரு பெரிய படர்ந்த தொகுதி. அது பற்றி முழுமையான வ...